Enthiran – Relax Rajini

அற்புதமாக வளரும் எந்திரன் – ரிலாக்ஸ் ரஜினி

ஒரு படம் ஆரம்பித்து அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து ரிலீஸ் ஆகும் வரை சூப்பர் ஸ்டாரிடம் ஒரு வித படபடப்பு இருக்கும். காரணம் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அனேகமாக இது தான் நம் கடைசிப் படமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர் கேமிரா முன்பே நிற்பார்.

Enthiran Stills

Enthiran Stills

‘முத்து’ படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே “ஆண்டவா இது தான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டே நடிக்க ஆரம்பித்ததாக ரஜினியே ஒரு விழாவில் கூறினார். இப்போது கூட அப்படித்தான். அந்த எண்ணம் மனதில் இருப்பதால், தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெற்றியடைய தன்னால் இயன்ற வரையில் அதிகபட்ச ஒத்துழைப்பு தருவார். இதனால் ஒரு வித டென்ஷன் அவரிடத்து காணப்படும். இதை டென்ஷன் என்று கூறுவதைவிட ஒரு வித படபடப்பு என்று கூறுவது சரியாக இருக்கும். (சிவாஜி ரிலீசுக்கு முந்தின தினம் நமக்கு எப்படி இருந்துச்சு? ஞாபகம் இருக்கா நண்பர்களே?)

ஆனால் எந்திரனைப் பொறுத்தவரை ரஜினி சற்று ரிலாக்ஸ் மூடில் இருப்பதாக கூறப்படுகிறது. யூனிட்டாரிடம் தலைவரின் இந்த ஜாலி மூட் பற்றி கேட்டபோது, “எந்த வித தொந்தரவும் இன்றி, நகரத்தின் பரபரப்புக்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு இரைச்சலற்ற புறநகர் பகுதியில், (சன் டைரக்ட் அலுவலக வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம்) படப்பிடிப்பு நடைபெறுவதால் தலைவர் ரிலாக்ஸ் மூடில் இருப்பது உண்மை. படப்பிடிப்புக்கேன்றே பிரத்யேக தளங்கள் ஏ.சி.வசதியுடன் கட்டப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. தவிர இறைவன் அருளால் எந்திரன் வளரும் விதம் தலைவருக்கு ரொம்பவே திருப்தி. ‘எனது முந்தைய படங்கள் ரெக்கார்டுகள் அனைத்தையும் எந்திரன் முறியடிக்கும்’ என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி வருகிறாராம் சூப்பர் ஸ்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.”

படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் காலை 9.00 மணிக்கு செட்டுக்குள் நுழைந்தால் சூப்பர் ஸ்டார் வீடு திரும்ப இரவு 11.30 ஆகிவிடுகிறதாம். ஷங்கருக்கு திருப்தி வரும் வரையில் எத்துனை டேக்குகள் வேண்டுமானால் நடித்துகொடுக்கிறாராம். (எந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகபட்ச டேக்குகள் வாங்குகின்றன.).

காட்சிகள் கச்சிதமாக வரவேண்டும் என்பதால் அந்தந்த காட்சிகள் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்கள் முன்னிலையிலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறதாம். எடுக்கப்படும் காட்சிகளில் ஏதாவது குறை இருந்தால் அவர்கள் உடனே சொல்லிவிடுவார்களாம். உடனே அது திரும்ப ஷூட் செய்யப்படுகிறது.

Be Sociable, Share!

2 Responses to “Enthiran – Relax Rajini”

  1. Even though Rajini is superstar, he is so dedicated and so co-operative with his directors.

    Last time Shivaji, entered in to U.S top 10 movies, but This time Enthiran will surely catch the 1st place in U.S top 10.

    All the best for the Enthiran team!!!

  2. translator is not working.

    please check and post in english.

Leave a Reply