Endhiran audio release on july 31th in malaysia
Endhiran Audio release on july 31th in malaysia
News in Tamil : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹாலிவுட் ஸ்டார் யாராவது கிடைத்தால் அவர்களையும் அழைத்து வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளில் எச்பிஓ நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளாவிய அளவில் எந்திரன் படத்தை இந்த நிறுவனம்தான் திரையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 தியேட்டர்களில் எந்திரன் திரையிடப்படவுள்ளது. ஸ்பைடர் மேன் படத்துக்குப் பின்னர் ஒரு படம் இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.