Enthiran – Hariharan Sung Enthiran Title Song

Hariharan Sung Enthiran Title Song – எந்திரனில் சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடலை பாடியிருப்பது யார்?

Enthiran Still

Enthiran Still

திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா?

கடந்த வாரம் நடைபெற்ற ஷெட்யூலில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரதான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

நாம் ஏற்கனவே கூறியபடி பெரும்பாலான வசனக் காட்சிகள் முடிந்துவிட்டன. இதுவரை படப்பிடிப்பு 80-85% வரை முடிந்துவிட்டது.

இந்நிலையில் எந்திரனில் பாடும் பாடகர்கள் பற்றிய செய்தி கசிந்துள்ளது. ஹரிஹரன் படத்தின் ஒப்பனிங் சாங் பாடியிருப்பதாக ஒரு தளத்தில் படித்ததாகவும், எஸ்.பி.பி. பாடவில்லையா? என்றும் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். நான் அவருக்கு பதிலளிக்கையில், “எனக்கு தெரிஞ்சு ஹரிஹரன் பாடுவது உண்மையா இருக்கலாம். ஆனா நிச்சயம் அது ஓப்பனிங் சாங்கா இருக்காது என்று கூறியிருந்தேன்.”

நாம் சொன்னபடியே ஹரிஹரன் படத்தில் பாடியிருப்பது உண்மை என்று இப்பொழுது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பாடியிருப்பது தலைவரின் இன்ட்ரோ சாங் அல்ல என்றும் அது டைட்டில் சாங் தான் என்றும் தெரிகிறது. சிவாஜி படத்தில் கூட டைட்டில் சாங் பாடியது ஹரிஹரன் தான். (வாஜி வாஜி). டைட்டில் சாங் என்பது இந்த இடத்தில் படத்தின் டைட்டில்கள் போடும்போது இடம்பெறும் பாடலை குறிப்பது அல்ல. படத்தின் பெயரான ‘எந்திரன்’ என்ற என்ற வார்த்தை இடம்பெறும் பாடல். உதாரணத்திற்கு சிவாஜியின் டைட்டில் சாங் “வாஜி வாஜி.” எந்திரனில் “எந்திரன்” என்ற வார்த்தை இடம்பெறும் பாடல்.

மேற்படி பாடலை தான் எந்திரனில் ரோபோவாக நடிக்கும் ரஜினி பாத்திரத்திற்காக ஹரிஹரன் பாடியிருப்பதாக தெரிகிறது. இந்த பாடலின் முதல் சில வரிகளை தான் கவியரசு வைரமுத்து ஒரு டி.வி.நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு கூறினார்.

(அஃறிணையின் கடவுள் நான்…
காமுற்ற தெய்வம் நான்…
சின்னஞ்சிறுசின் இதயம் திருடும் சிலிக்கான் சிங்கம் நான்…)

எந்திர மனிதனுக்காக மேற்படி பாடலை பாடுவதால் தனது குரலை சற்று எந்திரத்தனமாக மாற்றி இந்த பாடலை பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

இது தவிர நாம் அறிந்த வரையில் எஸ்.பி.பி., யோகி பி, மது ஸ்ரீ (வாஜி வாஜி புகழ்) ஆகியோரும் பாடல்களை பாடியுள்ளனர்.

எஸ்.பி.பி. தான் சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடல் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

Be Sociable, Share!

6 Responses to “Enthiran – Hariharan Sung Enthiran Title Song”

  1. Nice information u have shared

  2. super style

  3. This is one of the wonderful still i have ever saw.

    am setting as my desktop wallpaper.

  4. SPB is the king of music…………..

  5. super star style is always amazing

  6. SUPER STAR IS THE GREAT LEGEND AMONG LEADING ACTORS

Leave a Reply